0
சுரின்: தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லைப்பிரச்னை காரணமாக மோதல் வெடித்தது. இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான தாக்குதலை முன்னெடுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் மலேசியாவில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு நாடுகளும் போர்நிறுத்தத்துக்கு நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டன. நள்ளிரவில் போர் நிறுத்தம் அமலுக்கு வர இருந்த நிலையில், கம்போடியா பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று கம்போடியா தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான எல்லையில் சண்டை தொடர்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் பல இடங்களில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் திரும்பின. போர் காரணமாக இடம்பெயர்ந்த பலர் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.