இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்க, தனது ஒப்பந்தம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை தொடர்பில் நஷ்டஈடு கோரி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் (CAS – Court of Arbitration for Sport) அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

