ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாய்ச்சி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி ஜப்பானில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பதவியேற்ற மூன்றே மாதங்களில், ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி அந்நாட்டின் கீழ் சபையைக் கலைத்துள்ளார். தனது செல்வாக்கை உறுதிப்படுத்தவும், ஆளுங்கட்சியின் பலத்தை அதிகரிக்கவும் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட சனே […]
