நாடு இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், இது சுற்றுலா செல்வதற்கான நேரமல்ல. நாம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம்
நவம்பர் 20 ஆம் திகதி முதல் இன்று (12) வரை, ஆபத்தான இடங்களை ஆராய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 2,716 கோரிக்கைகள் வந்துள்ளன.
நாட்டில் தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையில் செய்ய வேண்டிய சிறந்த விஷயம், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடத்தில் தங்குவது தான். வார இறுதி சுற்றுலா செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மக்களிடமிருந்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது.
(தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர)

