நாட்டில் இடம்பெற்ற பல கொலைகளில் அரசியல்பின்புலங்கள் காணப்படுகிறது- ஜனாதிபதி

நாட்டில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களில் அரசியல் பின்புலங்கள் காணப்படுகின்ற என  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் துறையின்  159வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” பொதுமக்களின் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு ஆகிய இலங்கை பொலிஸ் திணைக்களம் எதிர்கொண்டுள்ள சவாலாகும்.  இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களத்திற்காக கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.

84 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸ் துறையில் கடமையாற்றுகின்றனர். பொலிஸ் துறையில் உள்ள சில கும்பல்களின் மோசடி செயல்கள் காரணமாக முழுபொலிஸ் துறையின் நற்பெயருக்கம் களங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

அதிகார மட்டத்தில் உள்ளவர்களாக இருக்கலாம் தனிநபராக இருக்கலாம் சட்டவிரோத செயல் எதுவாக இருந்தாலும் அது முழுபொலிஸ் துறையினையும் பாதிக்கும் இலங்கை பொலிஸார் மிகவும் திறமையானவர்கள் எந்தவொரு பிரச்சினையும் துல்லியமாக கையாண்டு சந்தேக நபர்களை கைது செய்யும் தைரியம் கொண்டவர்கள் .

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களை இதுவரையும் கண்டுபிடிக்கமுடியாமல் போனமைக்கு பொலிஸார் காரணமல்ல. பொலிஸார் மிகவும் தைரியமாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். ஆனால் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கமுடியாமல் உள்ள கொலைகள் உள்ளிட்ட குற்றசெயல்களுக்கு பின்னால் அரசியல்பின்புலங்கள் காணப்படுகின்றன அதுவே உண்மை” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

நன்றி

Leave a Reply