கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார,
ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு தசாப்த காலத்தை இழக்கிறது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த தசாப்தத்தின் பாதி அல்லது அதற்கும் குறைவான காலத்திற்குள் இந்த நிலைமையை மாற்ற உறுதிபூண்டுள்ளது.”குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நான் சீனாவிற்கு விஜயம் செய்தபோது, சீன அரசாங்கம் கடன் உதவியுடன் தொடங்கிய திட்டங்களை மீண்டும் தொடங்க எங்களுக்கு உதவுமாறு சீன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.
அவர் விசேட கவனம் செலுத்தி, தடைபட்ட அனைத்து திட்டங்களையும் தொடங்க சீன அரசாங்கத்திடமிருந்து தேவையான உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டார். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். , இந்த அதிவேக வீதி பகுதிக்காக விசேட சலுகை கடன் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதன்படி, டொலர்களில் விசேட கடன் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அதை யுவானில் செலுத்தலாம் என்றும் அவர் எங்களுக்குத் தெரிவித்தார். அதன்படி, சீன எக்ஸிம் வங்கி 2.5% – 3.5% வட்டி வீதத்தில் இந்தக் கடனை எங்களுக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கு நன்றி.”