சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஒரு பிடியாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்திற்கு முன்னிலையாகாததற்காக வழங்கப்பட்ட ஒரு உத்தரவு. உள்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்க அவர் நடத்திய போராட்டத்தின் காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் நீதிமன்றத்தில்முன்னிலையாகவில்லை என்பதே முக்கியமாக எழுந்துள்ள விடயம்,” என்றார்.
நாமல் ராஜபக்ச மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, சட்டவிரோதமாக கூடியதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
உங்கள் கட்சி தலைமைகளுக்கு தற்போது பிரச்சினையாக உள்ளது ஏன் உங்களின் நேரம் சரியில்லையா என அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த சி.பி. ரத்நாயக்க,
நேரம் சரியில்லை என்று இல்லை…. எதிர்க்கட்சியை அடக்கி ஆள பார்க்கிறார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நெல்சன் மண்டேலாவை 19 முதல் 22 வருட காலம் சிறையில் வைத்திருந்தனர். அவரை சிறையில் நசுக்கி வைத்து இருந்தாலும் அவர் அந்த நாட்டின் ஜனாதிபதி ஆனார்.
அதேபோல் மார்க்கோசுக்கு செய்யாத அநியாயமா? இன்று அவரின் புதல்வர் தான் நாட்டை ஆள்கிறார்.
இது போல் போராளிகளை அடக்கி ஆள் நினைத்தால் அவர்களின் சக்தியை அதிகார வர்க்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.