நாம் ஒரு தனித்துவமான தேசமாக, நம்மைக் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும்  நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த எசல மகா பெரஹெரா, பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், நிறைவு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் ஆவணம் சம்பிரதாயபூர்வமாக இன்று (09) கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இருபதாம்  நூற்றாண்டின் வெற்றிகள் மற்றும் நமது வரலாற்று பாரம்பரியத்தின் அடிப்படையில் நாம் ஒரு தனித்துவமான தேசமாக நம்மைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், இந்த தலதா பெரஹெரா நிகழ்வு இதில் ஒரு மைல்கல் என்றும், நாட்டின் எதிர்காலத்திற்காக இதுபோன்ற கலாசார நிகழ்வுகள் பொதுமக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றப்பட வேண்டும் என்றும், இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


நன்றி

Leave a Reply