தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இடைக்கால இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரிய போதிலும், உத்தரவைப் பிறப்பிக்காத மேல் நீதிமன்றம், பிரதிவாதியான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை மாத்திரம் விடுப்பதாக தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான ராஜித சேனாரத்னவிற்கு நாளை (29) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணைக்கு அமைய நாளை அவர் கட்டாயம் அந்த நீதிமன்றில் முன்னிலையாவார் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.
பின்னர் மனுவை செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க திகதியிடப்பட்டது.
The post நாளை ஆஜராவதாக ராஜித்த உறுதி appeared first on LNW Tamil.