பீரிமியர் லீக் போட்டிகளில் இன்றைய தினம் இடம்பெற்ற லிவர்புல்( Liverpool) மற்றும் நியூ காஸ்ல் (Newcastle) அணிகளுக்கிடையிலான போட்டியில் கடைசி நிமிடத்தில் இளம் வீரர் ன்கம்மோஹா (Ngumoha) அடித்த கோலின் உதவியுடன் லிவர்புல் அணி 3-2 என தீரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
இப்பருவகாலத்திற்கான பீரிமியர் லீக் கழக மட்ட காற்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய தினம் நடப்பு சாம்பியன் லிவர்புல் அணி நியூ காஸ்ல் அணியை எதிர்கொண்டது. போட்டியின் 35வது நிமிடத்தில் ரியன் கிரவன்பேர்ஜ் லிவர்புல் அணியின் முதல் கோலினை பதிவு செய்து அசத்தினார்.
பின்னர் முதல் பாதியின் கடைசி தருணத்தில் நியூ காஸ்ல் வீரர் அன்டோனி கோர்டோன் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டார். பின்னர் முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் அடுத்த நிமிடமே அதாவது 46வது நிமிடத்தில் ஹகோ எக்கிடிகே லிவர்புல் அணியின் முன்னிலைப்படுத்தி அசத்தினார். 2-0 என அவ்வணி முன்னிலைப்பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் புருனோ குய்மாரஸ் 57வது நிமிடத்தில் 2-1 என போட்டியில் முதல் கோலினை பதிவு செய்து அச்ததியது. விறுவிறுப்பாக சென்ற குறித்த போட்டியில் 88வது நிமிடத்தில் லிவர்புல் அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் வில்லியம் ஒசுலா நியு காஸ்ல் அணியின் கோல் எண்ணிக்கையை 2க உயர்த்தினார்.
2-2 என போட்டி சமநிலைப்பெற்ற நிலையில் லிவர்புல் அணியின் இளம் வீரர் ரியோ ன்கம்மோஹா கடைசி நிமிடத்தில் தனது சிறப்பான கோலின் உதவியுடன் லிவர்புல் அணியின் வெற்றியை உறுதி செய்து அசத்தினார். இதனால் 3-2 என நடப்பு சம்பியன் லிவர்புல் அணி வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் 3மிடத்திற்கு முன்னேறியது.