நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வானூர்திகளை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

இருப்பினும், குறித்த மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தின் குறித்த நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு அவசர சேவைகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு நாடு தழுவிய பொது விடுமுறை நாட்களாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply