பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று (29) காலை மூன்று மணி நேரம் நடைபெற்ற பயணச்சீட்டு (டிக்கெட்) பரிசோதனையின் போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 40 பயணிகள் கைது செய்யப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பயணிகளில் 23 பெண்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையை பார்த்த சில பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மூன்று மணி நேரம் பயணச்சீட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட 30 பயணிகளிடமிருந்து உடனடியாக 91,200 ரூபா அபராதத்தை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் வசூலித்துள்ளனர்.
மீதமுள்ள பயணிகள் அந்த நேரத்தில் அபராதம் செலுத்த பணம் இல்லாததால் தங்கள் வைப்புத்தொகையை விட்டுச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.