பம்பலப்பிட்டி பகுதியில் இரவு விடுதி சுற்றிவளைப்பு – ஒருவர் கைது

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் போயா தினத்தை முன்னிட்டு நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போயா தினத்தன்று மதுபான விற்பனை தொடர்பான தகவல்கள் தெரியவந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

அங்கு பணிபுரிந்த உள்ளூர் மேலாளர், உரிமம் இல்லாமல் மதுபானம் விற்பனை செய்ததற்காகவும், வைத்திருந்ததற்காகவும், வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த இரவு விடுதி வெளிநாட்டவரால் நடத்தப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திவுல்தமன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply