பலஸ்தீனர்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள இளவரசர்

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள், மிருகத்தனமான நடைமுறைகள் மற்றும் இடம்பெயர்வு முயற்சிகளுக்கு சவுதி அரேபியாவின் கண்டனத்தை பட்டத்து இளவரசர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆக்கிரமிப்பின் பேரழிவு விளைவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, பாலஸ்தீன பொதுமக்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மஹ்மூத் அப்பாஸ் மற்றும் மொஹமட் பின் சல்மான் ஆகியோருக்கிடையிலான இன்றைய (11) தொலைபேசி உரையாடலின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் மாநாட்டின் போது பாலஸ்தீனத்திற்கு மிகப்பெரிய சர்வதேச ஆதரவை உறுதி செய்வதற்கான நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்பதில் சவுதி தலைமையின் அயராத முயற்சிகளுக்கு அப்பாஸ்  இதன்போது தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply