பளையில் இருந்து வடமராட்சிக்கு போதைப்பொருட்களை கடத்தி விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது

 

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் அப்பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக  காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை  காவல்துறையினா்  நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து ஒரு தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் , இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , பளை பகுதியில் உள்ள போதை வியாபாரி ஒருவரிடம் போதைப்பொருளை வாங்கி வந்து வடமராட்சி பகுதியில் விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.  அதன் அடிப்படையில் பளையை சேர்ந்த போதை வியாபாரியை கைது செய்வதற்கும்   காவல்துறையினா்   நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

#Vadamarachchi #Drug Trafficking #Vadamarachchi #Drug Trafficking #Kilinochchi  #Jaffna

நன்றி

Leave a Reply