பள்ளிவாசலுக்கு சோலார் வசதி – மாதாந்தம் 135,000 ஆயிரம் மீதி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் D – 100 திட்டத்தின் கீழ் கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலுக்கு 44KW திறன் கொண்ட சோலார்  வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வந்த பெருந்தொகை மின்சார கட்டண பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் விதமாக  ஹரீஸ் தனது டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 லட்சம் பெறுமதியான சோலார் சிஸ்டம் கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசலின் மேல்தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது.  

இந்த சோலார் சிஸ்டம் பொருத்தும் வேலைத்திட்டத்தினால் பள்ளிவாசல் மாதாந்தம் இலங்கை மின்சார சபைக்கு செலுத்திவந்த மின் பட்டியல் கட்டணம் 135,000ஆயிரம் இப்போது இல்லாமலாகி எவ்வித கட்டணமும் இப்போது நாங்கள் செலுத்துவதில்லை என்றும் இந்த சோலார் மூலம் மாதாந்தம் 120,000ஆயிரம் பள்ளிவாசலுக்கு  மேலதிகமாக வருமானமாக வருவதாகவும் இந்த வருமானத்தினூடாக பள்ளிவாசலின் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் இப்படியான நிலையான வருமான மூலங்கள் கிடைக்க உதவிய முன்னாள் எம்.பி எச்.எம்.எம். ஹரீஸுக்கு நன்றிகளையும் தமது பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கல்முனை முஹைத்தீன் பெரிய பள்ளிவாசல் செயலாளர் முபாரிஸ் ஹனீபா இதன்போது தெரிவித்தார்.

(சர்ஜுன் லாபீர்)

நன்றி

Leave a Reply