பாகிஸ்தானில் கனமழையால் 344 பேர் உயிரிழப்பு | 344 dead in pakistan due to heavy rain

பெஷாவர்: பாகிஸ்தானில் பெய்த கனமழை, பெருவெள்ளம் காரணமாக 344 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் காரணமாக அங்கு இதுவரை 307 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சில மாகாணங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மழையால் கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள புனர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது . 74 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

இதையடுத்து பாகிஸ்​தானில் மழை, பெரு​வெள்​ளத்​தால் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 344-ஆக உயர்ந்​துள்​ளது. இதைத் தொடர்ந்து அங்கு மீட்​புப் பணி​யில் 2,000 பேர் ஈடு​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து கைபர் பக்​துன்கவா மீட்பு ஏஜென்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் அகமது ஃபைசி கூறும்​போது, “கனமழை, பல இடங்​களில் நிலச்​சரிவு, சாலைகள் அடித்து செல்லப்​படு​தல் போன்ற காரணங்​களால் அப்​பகு​தி​களுக்கு ஆம்​புலன்ஸை எடுத்​துச் செல்​லுதல், நிவாரணப் பொருட்​களை எடுத்துச் செல்​லுதல் போன்ற பணி​களுக்கு சவால் ஏற்​பட்​டுள்​ளது. சாலைகள் மூடப்​பட்​டுள்​ள​தால் அங்கு மீட்​புப் பணி​யாளர்​கள் கால்​நடை​யாக நடந்து சென்று பணி​யில் ஈடு​பட்​டு வரு​கின்​றனர்​’’ என்​றார்​

நன்றி

Leave a Reply