பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 12 பேர் உயிாிழப்பு

 

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (11)   இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  20 பேர் காயமடைந்துள்ளனர்

உயர் நீதிமன்றத்திற்கு அருகில்  இடம்பெற்ற இந்தக்  குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.    உயர் அரச அலுவலகங்கள் நிறைந்த மாவட்டத்தில் உள்ள நகரத்தின் பரபரப்பான நீதித்துறை வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குறித்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும்    இது ஆப்கானிஸ்தான் தாலிபான் மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய போராளிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

வடமேற்கு பாகிஸ்தானில் ஒரு  கல்லூரியில் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலின்  ஒரு நாளுக்குள் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

The post பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 12 பேர் உயிாிழப்பு appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply