பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!


பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்றைய (வெள்ளிக்கிழமை ) தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. […]

நன்றி

Leave a Reply