2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் 45-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது. […]
