இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்ற T20 முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்நிலையில், 115 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
