பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் மன்னிப்பு கேட்ட சர்வதேச போட்டி நடுவர்… – Lanka Truth | தமிழ்

சர்வதேச போட்டி நடுவர் மன்னிப்பு கோரியதாக, பாகிஸ்தானின் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ண போட்டியின் போது “கைகுலுக்கும் சர்ச்சை” தொடர்பாக ICC போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் அல் அகா மற்றும் அணி மேலாளரிடம் மன்னிப்பு கோரியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 14 அன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி தலைவர்கள் கைகுலுக்குவது தடுக்கப்பட்ட சம்பவமானது, தவறான தகவல்தொடர்பு காரணமாக ஏற்பட்டது என்று பைக்ராஃப்ட் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், செப்டம்பர் 14 போட்டியின் போது, நடத்தை விதி மீறல் குறித்து விசாரணை நடத்த ICC விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவித்துள்ளது.


0

நன்றி

Leave a Reply