பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்றைய தினம் (06) எதிர்வரும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி குழாமை அறிவித்தது.

இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் சிம்பாப்வேயும் பங்கேற்கும் ஒரு T20 முத்தரப்புத் தொடர் ஆகியவை உள்ளடங்குகின்றன.

இறுதியாக இலங்கை அணி பாகிஸ்தானை ஆசியக் கிண்ணத்தின் சுப்பர் ஃபோர்ஸ் சுற்றில் எதிர்கொண்ட நிலையில் அந்தப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதற்கிடையில், பாகிஸ்தான் அணி இந்தத் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவுடன் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடியது.

அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இதேவேளை, இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கும் சரித் அசலங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் குழாமில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தின்படி, முதலில் பெயரிடப்பட்டு முழங்கால் காயம் காரணமாக விலகிய தில்ஷான் மதுஷங்கவிற்குப் பதிலாக ஈஷான் மாலிங்க இணைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மதீஷ பத்திரன மேல் சுவாசக்குழாய் தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதால் அவர் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக அசித பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாமில், சரித் அசலங்க (C), பெத்தும் நிஸ்ஸங்க, லஹிரு உதார, கமில் மிஷார, குசல் மெந்திஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெந்திஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், ஈஷான் மாலிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இருபதுக்கு – 20 போட்டிக்கான குழாமில், சரித் அசலங்க (C), தசுன் ஷானக (VC), பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெந்திஸ், குசல் பெரேரா, கமில் மிஷார, கமிந்து மெந்திஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, அசித பெர்னாண்டோ, ஈஷான் மாலிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply