பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள், தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளை பிற்பகல் 2 மணி வரை நீடித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு அமைச்சு அறிவித்துள்ளது.

கைத்தொழில் பேரிடர் ஆதரவு மையம் இன்றுவரை 18,321 விசாரணைகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சின் தகவல்படி, கைத்தொழில் அமைச்சின் உற்பத்தித் துறையின் கீழ் உள்ள 6,362 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 7,510 நுண் நிறுவனங்கள், 6,256 சிறிய அளவிலான நிறுவனங்கள், 3,998 நடுத்தர அளவிலான நிறுவனங்கள், மற்றும் 557 பெரிய அளவிலான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு அறிவிக்கும் வகையில், 071-2666660 என்ற அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கைத்தொழில் உரிமையாளர்கள் தொடர்புடைய தகவல்களை விரைவாக வழங்குமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

தகவல்களை www.industry.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் உள்ளீடு செய்யலாம்.

மேலதிக உதவிகளைப் பிரதேச மற்றும் மாவட்டச் செயலக அலுவலகங்களில் கடமையில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளிடமும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply