புதுடெல்லி: பின்டெக் நிறுவனமான பாரத்பே நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (சிஎச் ஆர்ஓ) ஹர்ஷிதா கன்னா நேற்று நியமிக்கப்பட்டார். ஹோம் கிரெடிட் இந்தியா, அல்காடெல் லூசென்ட், சிஎஸ்சி, ஹெவிட் ஆகியவற்றில் பணியாற்றிய கன்னா 18 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர்.
இதுகுறித்து பாரத்பே தலைமை செயல் அதிகாரி நலின் நெகி கூறுகையில்,“உயர்செயல் திறன் கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்” என்றார். இதே போன்று என்ஐஐடி நிறுவனத்தில் ஷில்பா துபா புதிய சிஎச் ஆர்ஓ-வாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ், வால்மார்ட், ஹிந் துஸ்தான், கோகோ-கோலா, ஜிஎஸ்கே போன்ற நிறுவனங் களில் பணியாற்றியுள்ளார்.
