பாலைதீவு படகு விபத்து – உயிாிழப்பு அதிகாிப்பு

 

யாழ்ப்பாணம் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு குருநகர் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் இருவரும் யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய எம்.ஜோசப் மற்றும் 57 வயதுடைய பிரான்ஸிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் சடலங்கள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், 13 வயது சிறுவன் ஒருவன், 4 பெண்கள் மற்றும் 8 ஆண்கள் என மொத்தம் 13 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு ஆணும் இரு பெண்களும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#JaffnaBoatTragedy #PalaitivuStAnthony #GurulagarVictims #EmergencyTreatment

நன்றி

Leave a Reply