கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரியை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப் பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பியல் மனம்பேரிக்கு எதிரான வழக்கு இன்று (22) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வீடியோ தொழில்நுட்பம் ஊடாக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
பின்னர், சந்தேகேநபரை இந்த மாதம் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு உத்தரவிட்டார்.
மித்தெனியவில் உள்ள தலாவ பகுதியில் உள்ள காணி ஒன்றில் ஐஸ் என்ற போதைப் பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அண்மையில் மீட்கப்பட்டது.
குறித்து சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
