அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர் நரேந்திர மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாது” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாக அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால் அந்நாட்டின் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரியை, உயர்த்தப் போவாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்பிற்கு பிரதமர் மோடியோ, வெளியுறவு அமைச்சரோ இதுவரை கண்டனம் தெரிவிக்காத நிலையில், அதனைக் கண்டித்து ராகுல் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் ”அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர் மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாது. அதற்குக் காரணம், அதானி மீதான அமெரிக்காவின் விசாரணைதான்.
அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரும் அபாயம் இருப்பதால் மோடியால் ட்ரம்பை எதிர்க்க முடியவில்லை. மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன” இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.