இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நடுவர் குழாமின் ஜாம்பவானான டிக்கி பேர்ட் (Dickie Bird) தனது 92ஆவது வயதில் இன்று காலமானார்.
அவர் மரணமடைந்த செய்தியை இங்கிலாந்தின் கிரிக்கெட் கழகமான யோக்ஷியர் கழகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கள நடுவராக செயற்பட்ட காலத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட ஒருவராக டிக்கி பேர்ட் (Dickie Bird) திகழ்ந்தார்.
அதேநேரம் முதல் தர கிரிக்கெட் களத்தில் யோக்ஷியர் மற்றும் லைஸ்ஸடஷியர் அணிக்காக டிக்கி பேர்ட் விளையாடி இருப்பதுடன் வலது கை துடுப்பாட்ட வீரராகவும் அவர் திகழ்ந்தார்.
அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 93 போட்டிகளில் விளையாடி 2 சதங்களையம் பெற்றுள்ளார். எதிர்பாராத விதமாக அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக தனது 31 வயதில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விளகினார்.
எவ்வாறு இருப்பினும் புதியதொரு பரிமானத்தைத் தேர்தெடுத்த டிக்கி பேர்ட் கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தினால் போட்டி நடுவராக செயற்பட்த் தீர்மானித்து களமிறங்கினார்.
அந்தவகையில் 66 டெஸ் போட்டிகளுக்கும் 69 ஒரு நாள் போட்டிகளுக்கும் நவராக செயற்பட்டுள்ள டிக்கி பேர்ட் (Dickie Bird) 3 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு நடுவராக கடமையாற்றி சாதனைபடைத்திருந்தார். இறுதியாக 1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியிருந்தார். இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக தனது 92 ஆவது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.