பிரபல டிசிஎஸ் நிறுவனம் 2% ஊழியரை குறைக்க முடிவு: 12,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் | TCS to reduce staff by 2 percent 12,000 people at risk of lay offs

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் நேற்று கூறியுள்ளதாவது:

2026 நிதியாண்டில் 2 சதவீத பணியாளர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சந்தைகளில் நுழைவது, புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது, ஏஐ பயன்படுத்துவது போன்றவற்றால் நிறுவனம், ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்து மறுபணியமர்த்த உள்ளது. ஆனால், இந்த செயல்முறையின் விளைவாக வேலைவாய்ப்பில் ஒரு பகுதி அதாவது 12,200 வேலைகள் குறைக்கப்படும்.

எங்​களின் வாடிக்​கை​யாளர்​களுக்கு சேவை வழங்​கு​வ​தில் எந்த பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் இருப்​பதை உறுதி செய்​வதற்​காக இந்த மாற்​றத்தை உரிய கவனத்​துடன் செயல்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு டிசிஎஸ் தெரி​வித்​துள்​ளது.

இந்​திய ஐடி துறை நிச்​சயமற்ற தன்​மையை எதிர்​கொண்​டுள்​ளது. இதன் காரண​மாக, செல​வு​களை கட்​டுப்​படுத்த வேண்​டிய நிலைக்கு அவை தள்​ளப்​பட்​டுள்​ளன. வாடிக்​கை​யாளர் முடி​வெடுப்​ப​தி​லும், திட்​டத்தை தொடங்​கு​வ​தி​லும் கால​தாமதம் ஏற்​படு​வ​தாக டிசிஎஸ் தலைமை நிர்​வாகி கே.கிருத்​தி​வாசன் தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply