
பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறையில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் தேசிய குற்றவியல் அமைப்பின் நாடுகடத்தல் பிரிவு அதிகாரிகளால் 30 வயதுடைய அந்த நபர் சில நாட்களுக்கு முன் பிடிபட்டார். அவர் மீது பிரான்ஸ் அதிகாரிகளால் குற்றவியல் விசாரணை தொடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், ஆரம்பகட்டமாக விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரைச் சார்ந்த நாடுகடத்தல் தொடர்பான விசாரணை வரும் 2026 மார்ச் 26 ஆம் திகதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
