லண்டனின் விம்பிள்டன் நகர மையப்பகுதியில் (The Broadway) நேற்று (பெப்ரவரி 22, 2026) அதிகாலை நடைபெற்ற அதிர்ச்சிகரமான கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய நபர் ஒருவரை மெட் காவற்துறையினர் (Metropolitan Police) கைது செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:37 மணியளவில் விம்பிள்டன் ‘திபுரோட்வே’ (The Broadway) பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலத்த கத்திக் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அதே இரவு 30 வயதுடைய ஒருவரை காவற்தறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர் தற்போது காவற்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் அல்ல (Isolated Incident) என்றும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்றும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் சோதனைகள் மற்றும் சிசிடிவி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
The post பிரித்தானியாவின் விம்பிள்டன் நகரில் கத்திக்குத்து: கொலையாளி கைது! appeared first on Global Tamil News.
