பிரித்தானியாவின் பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
அந்தவகையில் தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அமைதி விருத்திசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மாற்றங்கள் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டு குடிமக்களுக்கு சவாலாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மிகவும் கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுவதாகவும்,மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சட்டங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.