பிரித்தானிய சில்லறை விற்பனை மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு!

உத்தியோகப்பூர்வ புள்ளி விபரங்களுக்கு அமைவாக பிரித்தானிய சில்லறை விற்பனை வர்த்தகமானது 2022 ஜூலை மாதத்துக்குப் பின்னர்  கடந்த செப்டெம்பரில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.

புதிய iPhone 17 வெளியீட்டிற்கும், தங்கத்திற்கான வலுவான தேவைக்கும் மத்தியில் இந்த வியக்கத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ONS) தரவுகளின்படி, கடந்த செப்டெம்பர் மாதத்தில் சில்லறை விற்பனை அளவுகள் 0.5% அதிகரித்துள்ளன.

இது தொடர்ந்து நான்காவது மாதாந்திர அதிகரிப்பாகும் என்பதுடன், இது 0.2% மாதாந்திர வீழ்ச்சி என்ற பொருளாதார வல்லுநர்களின் கணிப்புகளையும் குழப்பமடையச் செய்தது.

கடந்த மாதம் கணினி மற்றும் தொலைத்தொடர்பு பொருட்களின் சில்லறை விற்பனையானது வலுவாக முன்னேற்றம் கண்டது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், பாதுகாப்பான புகலிடப் பொருளாக தங்கத்திற்கான வலுவான தேவை 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதன் மிகப்பெரிய விலை ஏற்றத்தை பிரதிபலித்ததால் தொடர்ந்து எட்டாவது மாதமாக 2025 செப்டெம்பரில் ஒன்லைனில் மஞ்சள் உலோகத்தின் விற்பனை எழுச்சியை கண்டது.

அதேநேரம், செப்டம்பரில் மிகப்பெரிய விற்பனை உயர்வு உணவு அல்லாத வர்த்தக நிலையங்களில் இருந்தும் பங்காற்றியது.

இதில் பல்பொருள் அங்காடிகள், ஆடை மற்றும் வீட்டுப் பொருட்கள் விற்பனையும் அடங்கும்.

எவ்வாறெனினும், கடந்த மாத விற்பனை அளவானது 2020 பெப்ரவரியில் இருந்த தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட 1.6% குறைவாகவே உள்ளதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நன்றி

Leave a Reply