பிலிப்பைன்ஸில் கல்மேகி (Kalmaegi) புயல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (05) 90ஐத் தாண்டியது.
புயலினால் அண்மையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்திற்குப் பின்னர், கடுமையாகப் பாதிக்கப்பட்ட செபு மாகாணத்தில் ஏற்பட்ட பேரழிவு தாக்கம் தெளிவாகத் தெரிந்தது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதனால், கார்கள், லொறிகள் பெரிய கப்பல் கொள்கலன்கள் கூடி நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
செபு மாகாணத்தின் பெருநகரப் பகுதியின் ஒரு அங்கமாக இருக்கும் லிலோன் நகரத்தின் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் இருந்து 35 உடல்கள் மீட்கப்பட்டதாக செபு செய்தித் தொடர்பாளர் ரோன் ராமோஸ் சர்வதேச செய்திகளிடம் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த துயரச் செய்தி செபுவின் எண்ணிக்கையை 76 ஆகக் கொண்டு வந்தது.
முன்னதாக, தேசிய சிவில் பாதுகாப்பு துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ ஏனைய மாகாணங்களில் குறைந்தது 17 இறப்புகளை உறுதிப்படுத்தினார்.
கல்மேகி புயல் கரையை கடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, செபு நகரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் 183 மிமீ மழை பெய்தது.
இது அதன் மாதாந்திர சராசரியான 131 மிமீ மழையை விட அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தம் காரணமாக சுமார் 400,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.



