2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 307,951 பேர் தோற்றி, 51,969 மாணவர்கள், அதாவது மொத்த பரீட்சார்த்திகளில் 17.11 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளர். பரீட்சை முடிவுகளை வெளியானதை அடுத்து, மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகள் நடைபெறும். அதில் தப்பில்லை. இதன்போது சித்தியடையாத மாணவர்களின் “பிஞ்சு மனம்” பாதிப்படைக்கூடாது என்பதில் பாடசாலை சமூகமும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோரும் கவனமாக இருக்க வேண்டும். இங்குள்ள படம் பல துயரங்களை நமக்கு எத்திவைக்கிறது. தயவுசெய்து பிள்ளைகளின் மனதுகளை காயப்படுத்தாமல் செயற்படுவோம்…