​​​​​​​பிஹாரில் ரூ.27,000 கோடியில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி: அதானி பவர் நிறுவனம் தகவல் | Adani Power to invest power project in Bihar

புதுடெல்லி: பிஹாரில் ரூ.27 ஆயிரம் கோடி​யில் 2,400 மெகா​வாட் மின் உற்​பத்தி ஆலையை நிறு​வப் போவ​தாக அதானி பவர் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அதானி பவர் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் மாநிலத்​துக்கு 25 ஆண்​டு​களுக்கு மின்​சா​ரம் வழங்​கு​வது தொடர்​பாக அம்​மாநில மின் உற்​பத்தி நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்​துள்​ளோம். இதன்​படி, ரூ.26,482 கோடி மதிப்​பில் பாகல்​பூர் மாவட்​டம் பிர்​பைன்ட்​டி​யில் அனல் மின் உற்​பத்தி தொழிற்​சாலை நிறு​வப்​படும். இங்கு 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறு​வப்​படும். 5 ஆண்​டு​களில் உற்​பத்தி தொடங்​கப்​படும். இங்கு உற்​பத்தி செய்​யப்​படும் மின்​சா​ரம் பிஹார் மாநிலத்​துக்கு யூனிட்​டுக்கு ரூ.6.075 என்ற விலை​யில் வழங்​கப்​படும்.

இந்த திட்​டத்​தின் கட்​டு​மானப் பணி​யின்​போது நேரடி​யாக​வும் மறை​முக​மாக​வும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்​கும். தொழிற்​சாலை செயல்​பாட்​டுக்கு வந்​ததும் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்​கும். நாட்​டின் மிகப்​பெரிய அனல் மின் உற்​பத்தி நிறு​வனங்​களில் ஒன்​றான அதானி பவர், 18,110 மெகா​வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களைக்​ கொண்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply