புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை – Sri Lanka Tamil News

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச பாடசாலைகளைப் போலவே அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளும் அந்த நாளில் செயல்பட வேண்டாம் என கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதைப் போன்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளையும் அன்றைய தினம் நடத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல் சர்வதேச பாடசாலைகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் முன்பள்ளிகளை நடத்த வேண்டாம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அதனுடன், அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் மற்றும் விரிவுரைகளையும் நடத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவி வரும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.


Add as a preferred source on Google

நன்றி

Leave a Reply