புதிய உச்சம் எட்டிய வெள்ளி விலை: தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு | Silver price hits new high Gold surge by Rupees 320 per sovereign

சென்னை: சந்தையில் இன்று (செப்.26) வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பில் சரிவு உள்ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை அதிரடி​யாக உயர்ந்​து வருகிறது.

அந்த வகையில் கடந்த 23-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.85,120 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதையடுத்து செப்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 மற்றும் ரூ.90 என குறைந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,550-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.84,400-க்கு விற்பனை ஆகிறது. இதே போல 24 காரட் தங்கம் ரூ.92,072-க்கும், 18 காரட் தங்கம் ரூ.69,920-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை புதிய உச்சம்: இன்று வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,53,000-க்கு விற்பனை ஆகிறது.

நன்றி

Leave a Reply