பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி! – Athavan News

எதிர்வரும் வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நவம்பர் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பூட்டானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்போது, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெகா வாட் நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

பின்னர் பூட்டான் மன்னர் ( Jigme Khesar Namgyel Wangchuck ) ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை, பூட்டானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியாக பூட்டானுக்கு விஜயம் செய்த பிற்றதமர் மோடி அங்கு பூட்டானின் மிக உயர்ந்த குடிமகன் விருதான (Order of the Drug Gyalpo) ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ விருதையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply