சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும்
குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 6 பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் குறித்த நிறுவனத்தின் முகாமையாளர், வர்த்தகர் ஒருவர், மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மற்றொரு நபர் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
