2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் முன்னேற்றத்தை காட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. மொத்த ஏற்றுமதி வருவாய் 11554.32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.61% வளர்ச்சி என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளில் மொத்த ஏற்றுமதி வருவாய் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதனை 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.57% வளர்ச்சியாகும்.
இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட மூலோபாய முயற்சிகளின் நேர்மறையான தாக்கத்தையும் இது பிரதிபலிப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.