75ஆவது பெல்லன்வில எசல பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர இன்று இரவு வீதிகளில் ஊர்வலமாக நடத்தப்படும்.
ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகிய பெல்லன்வில எசல பெரஹெரா நாளை காலை நிறைவடையுட“
ஊர்வலம் காரணமாக அப் பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று இரவு 7.00 மணிமுதல் பொரலஸ்கமுவ சந்தியிலிருந்து பெல்லன்தொட்டை சந்தி வரையில் 119 பஸ் செல்லும் வீதியும் பெல்லன்தொட்டை சந்தியிலிருந்து பபிலியான சந்தி வரையான 117 பஸ் செல்லும் வீதியும் மூடப்படும்.
இந்த நேரத்தில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதனிடையே, நவகமுவ பத்தினி தேவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹெரா காரணமாக அங்கும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அவிசாவளை – கொழும்பு பழைய வீதி, வெலே சந்தி மற்றும் ரணால சந்திக்கான பாதை இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 2.30 மணி வரை மூடப்படும்.
அதே பாதை நாளை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மீண்டும் மூடப்படும். அதனால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் அம்பலாங்கொடயில் அமைந்துள்ள மோதர தேவாலயத்தின் எசல மகா பெரஹரா இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணி வரையில் காலி – கொழும்பு பிரதான வீதியில் நடைபெறும்.