நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தனியார் துறையின் ஈடுபாட்டுடன் இது ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சியின் கீழ், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் 40 AI கேமரா அமைப்புகள் நிறுவப்படும்.
இந்த அமைப்புகள் சாரதியின் நடத்தையைக் கண்காணித்து, அவரை எச்சரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
புதிய கேமரா அமைப்பு சாரதி சோர்வு, தூக்கம் மற்றும் கண் மூடுதலைக் கூட கண்டறியும் திறன் கொண்டது.