ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுகொல்லாவ வீதியில் பஹுலாவ சந்திக்கு அருகில் நேற்று (செப்.30) இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹொரவ்பொத்தானையில் இருந்து கபுகொல்லாவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஹொரோவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 21 வயதுடைய ஹொரோவ்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களது சடலங்கள் ஹொரோவ்பொத்தானை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் ஹொரோவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.