போராட்ட பேரணி காரணமாக, பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை குழு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
காசாவில் இடம்பெறும் வன்முறையைக் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைதியான போராட்ட பேரணி, பொரளை பொதுமயான சுற்றுவட்டாரத்திற்கு அருகில் ஆரம்பமாகி கெம்பல் பூங்காவை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது