பொடி லெசி  நாளை இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றாா்

 

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான  போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில்  காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டதை அடுத்து, பொடி லெசி ஒரு சட்டத்தரணியின் வாகனத்தில் ஏறி நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் காவல்துறையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பித்து, இரகசியமான முறையில் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
 அவரை கைது செய்வதற்கு விடுக்கப்பட்ட சர்வதேசப் பிடியாணையைத் தொடர்ந்து, இந்தியப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். ஓராண்டு காலமாக இந்தியச் சிறையில் இருந்த அவரை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில்  அவரை  அழைத்து வருவதற்காக நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ள நிலையில்   நாளை (27) அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒரு மிக முக்கியமான குற்றவாளி   நாடு கடத்தப்படுவதால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#CrimeNews #SriLanka #PodiLassi #DrugMafia #Extradition #LawAndOrder

The post பொடி லெசி  நாளை இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றாா் appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply