போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பீனென்ங் குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற ஓர் ரகசிய தகவலின் அடிப்படையில், வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்த போது அங்கு 2 மலேசிய பிரஜைகளுடன் குறித்த இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹெரோயின் உட்பட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சந்தேகநபர்களிடம் இருந்து 4 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி

Leave a Reply