மகளிர் உலகக் கிண்ணம்; தென்னாப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இலங்கை!

2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

இந்தப் போட்டி இன்று (17) கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.

நடந்து வரும் போட்டிகளில் இலங்கை அணி தொடர்ந்து வெற்றி பெறாமல் உள்ளது. 

இதுவரையான போட்டி முடிவுகளின்படி அதிர்ஷ்டம் அவர்களை கைவிட்டுவிட்டது போல் தெரிகிறது. 

அவர்களின் இரண்டு போட்டிகள் ஏற்கனவே மழையால் கைவிடப்பட்டுள்ளன.

மேலும் மீதமுள்ள போட்டிகளில் மீண்டும் மழையால் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

இன்று இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கொழும்பின் வானிலை மழைக்கான அதிகம் வாய்ப்புள்ளதாக இன்று காணப்படுகின்றது.

முதல் நான்கு போட்டிகளில் இருந்து இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்ற இலங்கை, தற்போது புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 

மறுபுறம், தென்னாப்பிரிக்கா ஒரு எழுச்சியில் உள்ளது. 

இதுவரை 4 போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன், அவர்கள் தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். 

அந்த வேகத்தை இலங்கையுடனான இன்றைய போட்டியிலும் அவர்கள் தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பாளர்கள்.

நன்றி

Leave a Reply