வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் இருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு இதுதானா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி.
சற்று நேரத்துக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர அவர்கள் அலுவலகத்தில் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கி சூடு நடந்தப்பட்டுள்ளது. தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்தத் தவிசாளர் என்பவர் மக்கள் பிரதிநிதியொருவராவார். மக்கள் பிரதிநிதிகளால் கூட பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாவிட்டால், இது தேசிய பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையொன்றாக அமைந்து காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

